• இராமநாதபுரம் அருகே காரான் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்..
 • பெங்களூரில் 6 பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர்
 • குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 23 பேர் பலி
 • புதிய சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவில் ஸ்ருதி ஹாசன்
 • நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை என புகார்
 • ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியது

தமிழ்நாடு

 • கிராம சபை கூட்டம்

  இராமநாதபுரம் அருகே காரான் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.  வார்டு உறுப்பினர் சரிதா லோகநாதன் வரவேற்புரை ஆற்றினார். 

  கிராமப்புற பொதுமக்கள் குப்பை மற்றும் கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதற்கான குப்பை தொட்டிகளை பயன்படுத்தி தங்களது குடியிருப்புகளையும், சுற்றுப்புறத்தினையும் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.  ஆழ்துளை கிணறுகள், பராமரிப்பின்றி இருக்கின்ற கிணறுகளை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.  குறுங்காடு மேம்பாட்டு திட்டம் நிறைவேற்றுதல் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதேபோல குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். முறைகேடான இணைப்புகள் மூலம் குடிநீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தினை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கிராமங்களுக்கு உட்பட்ட மக்களின் தேவைகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.  ஊராட்சி செயலர் கோவிந்தன், ஊராட்சி துணை தலைவர் கோபிராஜா  திட்டங்களை மக்களுக்கு புரியும் படி எடுத்துரைத்தனர்.  முடிவில் வார்டு உறுப்பினர் முத்து கிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது. 

  இக்கூட்டத்தில் காரான் கிராம VAO மணிகண்டன், மண்டபம் ஒன்றிய ஊர்நல அலுவலர் சுகுமாரன், கிராம செவிலியர்,  உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

  [...]
 • வேலுமணி
 • TNPSC

இந்தியா

வணிகம்

உலகம்

சினிமா

பொது செய்திகள்

 • நித்யானந்தா

  தலைமறைவாக உள்ள நித்யானந்தாவால் தமது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ள ஜனார்தன சர்மா, நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாவதாக புகார் அளித்துள்ளார்.

  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு சிறுவர்களை அடைத்து வைத்து குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தியதாக நித்யானந்தா ஆசிரம் மீது புகார் எழுந்தது. சிறுவர்களை வைத்து ஆசிரமத்திற்கு நிதி திரட்டியதாகவும், அப்போது சிறுவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் நித்யானந்தாவின் பெண் சீடர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தது உள்ளிட்ட புகார்களில் நித்யானந்தா மீதும் அகமதாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் தான் எங்கும் தப்பிச் செல்லவில்லை என்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு நித்யானந்தா விளக்கம் அளித்தார்.

  இதனிடையே நித்யானந்தா ஆசிரமத்தில் அடைபட்டிருக்கும் தமது மகள்களை மீட்டுத் தரக்கோரி ஜனார்தன சர்மா என்பவர் புகார் அளித்திருந்தார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்தன சர்மா, பெங்களூரில் நித்யானந்தாவின் குருகுலத்தில் தமது மூன்று மகள்களையும் மகனையும் சேர்த்ததாகவும் தானும் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். நித்யானந்தாவுடன் சுற்றுப்பயணத்திற்கு தமது மகள்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறிய சர்மா, அதன்பின்னர் தமது மூத்த மகள் திரும்பவில்லை என புகார் தெரிவித்துள்ளார்

  அவரை சந்திக்க அனுமதிக்காததால் போலீசில் புகார் அளித்ததாக தெரிவித்த ஜனார்தன சர்மா, ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தமது மகள்கள் கூறியதாக தெரிவித்துள்ளார். தமது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் ஜனார்தன சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

  [...]
 • டிக்டாக்
 • தற்கொலை